



சென்னை பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சில இடங்களில் பேருந்து நிழற்குடைகள் பழுதடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு இருந்தது இதனை அடுத்து வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 55 லட்சம் ரூபாய் செலவில் பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எம்கேபி நகர். கண்ணதாசன் நகர். பாரதி நகர். சத்தியமூர்த்தி நகர் உள்ளிட்ட ஐந்து இடங்களில் புதிதாக பேருந்து நிழல் குடைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. பணிகள் அனைத்தும் முடிவடைந்து இன்று காலை அந்த பேருந்து நிழற்குடைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி.பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி சேகர. வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் இளைய அருணா பகுதி செயலாளர்கள் முருகன். ஜெயராமன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.