திமுக கழக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருவொற்றியூர் ஐந்தாவது வட்டக் கழகப் பிரதிநிதி K. செந்தில்குமார் ஏற்பாட்டில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக திருவொற்றியூர் மேற்கு பகுதி செயலாளர் வை.மா அருள் தாசன் மற்றும் மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் லயன் V தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு 500 பேருக்கு புடவைகள், 100 பேருக்கு தலைக்கவசம், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அறுசுவை உணவு, தண்ணீர் பாட்டில் வழங்கினர். இந்நிகழ்வில் பேச்சாளர் வா. கருணாநிதி திருவொற்றியூர் மேற்கு பகுதி துணைச் செயலாளர் U.S. குறளரசன், வே. கோபால், டி.எஸ் பாபு, கோ. கஜேந்திரன், R. கிறிஸ்டோபர் ராயப்பன், C. தேவன், P. ரமேஷ் குமார், D. எல்லப்பன், E. செந்தில் மற்றும் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.