முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் அவர்கள் சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை காசிமேடு பகுதியில் சுனாமியால் உயிரிழந்தவர்களின் நினைவிடத்தில் கழகத்தின் சார்பில் மெழுகுவர்த்தி ஏற்றியும்,மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார். பின்னர் படகின் மூலம் நடுக்கடலுக்குச் சென்று இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கடலில் பால் ஊற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.