சென்னை வடகிழக்கு மாவட்டம் திருவெற்றியூர் மேற்கு பகுதி 2வது வட்ட கழக சார்பில் மாவட்டச் செயலாளர் மாதவரம் எஸ் சுதர்சனம் அறிவுறுத்தல் படி மேற்கு பகுதி செயலாளர் வை.மா. அருள்தாசன் ஆலோசனையில் பேரறிஞர் அண்ணாவின் 54 வது நினைவு தினத்தை முன்னிட்டு இரண்டாவது வட்ட கழக சார்பில் திருவொற்றியூர் மேற்கு பகுதி அவை தலைவர் என்.திருசங்கு தலைமையில் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் 2வது வட்ட அலுவலகத்தில் திமுக கொடியேற்றப்பட்டது. மாவட்ட பொருளாளர் எம்.ஆனந்தன், முன்னாள் அவைத் தலைவர் டி. எஸ்.மணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 2வது வட்டக் கழக செயலாளர் M. ஜெயச்சந்திரன், மாவட்ட பிரதிநிதி M சந்திரகுமார், வட்ட அவைத்தலைவர் K பாலு, வட்டத் துணைச் செயலாளர்கள் ர.மதன்குமார், D.கண்ணன், S.தேவி, வட்ட பொருளாளர் சீனிவாசன், வட்டப் பிரதிநிதிகள் சி.சேகர், M பிரசாத் , சி.ஜெயபிரகாஷ், Nசத்தியமூர்த்தி, சசி, ஹரி, மாரி, பால்சுதாகர், எஸ்.ஆகாஷ், S.அபினேஷ், B.வெற்றி, மற்றும் 2வது வட்டக் கழக நிர்வாகிகள் மகளிர் அணியினர் பலர் கலந்து கொண்டனர்.