பேரறிஞர் அண்ணாவின் 54 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருவெற்றியூர் தொகுதி சார்பில் திருவெற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் தலைமையில் அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் வீ.ராமநாதன், 5வது வார்டு மாமன்ற உறுப்பினர் கே.பி.சொக்கலிங்கம் மற்றும் நிர்வாகிகள் இரா.முருகேசன், ஏகா.கார்த்திகேயன் இரா.சந்தர் பா.பாலஉமாபதி பி.எஸ்.சைலஸ் கே. கார்த்திகேயன் உட்பட ஏராளமான திமுகவினர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.