


மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின்படி வடசென்னை நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய். 33 லட்சங்கள் செலவில் இராயபுரம் சட்டமன்றத் தொகுதி மண்டலம் – 5, வார்டு – 49, வார்டு – 50 ஆகிய பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட பயணிகள் நிழற்குடையை ஒரு பகுதியாக வார்டு – 49 CSI ரெயினி மருத்துவமனை அருகில் சென்னை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் தா.இளைய அருணா MC., இராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம். மூர்த்தி MLA , ஆகியோரது முன்னிலையில்வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி அவர்கள் ( 03.03.2023) இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் .
இந்நிகழ்வில் பகுதிக் கழகச் செயலாளர் இரா.செந்தில் குமார், தலைமை செயற் குழு உறுப்பினர் ந. மனோகரன், வட்டக் கழகச் செயலாளர்கள் கிருஷ்ணன், ஸ்ரீனிவாசன், சதிஷ் குமார், மாமன்ற உறுப்பினர் சுரேஷ் குமார், பகுதி மற்றும் வட்ட கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள் மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.