மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் கழக அயலக அணியின் தலைவர் டாக்டர்.கலாநிதி வீராசாமி MP அவர்களின் ஏற்பாட்டில்,இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அமைச்சர் திரு. பி.கே. சேகர் பாபு அவர்களின் தலைமையில், வடசென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த கழகத் தோழர்களுக்கு நலத்திட்ட உதவிகளை, சிறப்பு அழைப்பாளர் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் (08.03.2023.)இன்று ஆர்.கே.நகர் தண்டியார்பேட்டை வடசென்னை நாடாளுமன்ற அலுவலகத்தில் வழங்கப்பட்டது .

கழகத் தோழர்கள் 6000 நபர்களுக்கு வழங்கப்படவுள்ள நலத்திட்ட உதவிகள் பின்வருமாறு.

  1. தலைக்கவசம் உயிர்க்கவசம் என்ற முனைப்புடன் கழகத் தோழர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்திட ISI முத்திரை கொண்ட தலைக் கவசம் வழங்கப்பட்டது .
  2. கழகத் தோழர்களுக்கு சுவர் கடிகாரம் மற்றும் புத்தாடைகள், வழங்கப்பட்டது.
  3. விரல் நுனியில் தனது வடசென்னை தொகுதி வளர்ச்சிக்கான செயல்பாடுகளை மக்கள் அறிந்து கொள்ளவும் மற்றும் திமுக அயலக அணி தலைவரான மருத்துவர். கலாநிதி அவர்களை அயலக தமிழர்கள் நேரடியாக தொடர்பு கொள்ள “Dr. Kalanidhi” செயலி அறிமுகம் செய்யப்பட்டது .

இவ்விழாவில்

நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் மாண்புமிகு கே.என்.நேரு அவர்கள்

சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் த.இளைய அருணா எம்.சி., ஜெ.ஜெ.எபினேசர் எம்.எல்.ஏ. சென்னை மாநகராட்சி மேயர் திருமதி. பிரியா ராஜன்,ஆகியோர் முன்னிலை வகித்தார்கள் .

மேலும் இவ்விழாவில் –
வடசென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சென்னை வடகிழக்கு மாவட்டச் செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம், சட்டமன்ற உறுப்பினர்களான ஆர்.டி.சேகர், ஐ ட்ரீம் மூர்த்தி , கே.பி. பி. சங்கர், தாயகம் கவி மற்றும் பகுதிச் செயலாளர்கள், மண்டலக்குழு தலைவர்கள், வட்டச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள் பங்கேற்றுச் சிறப்பித்தனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *