

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் அதிமுகவினர் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராயபுரம் ராமதாஸ் நகரில் உள்ள பொதுமக்கள் 500 பேருக்கு மதிய உணவு மற்றும் புடவைகளை முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் வழங்கினார். 53வது வடக்கு வட்ட பொருளாளர் ராம்தாஸ்நகர் பொருளாளர் எஸ்.பாஸ்கர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ராயபுரம் பகுதி செயலாளர்கள் ஏ.டி.அரசு, வி.எம்.மகேஷ், பகுதி துணை செயலாளர் ஆர்.மோகன் வட்ட செயலாளர்கள் எஸ்.எஸ்.குமார், வி.ஆர்.எஸ்.சக்திராஜேஷ், எஸ். எம்.ரிஸ்வான், நிர்வாகிகள் b.நவின், b.நரேஷ் உங்கிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துடனர்.