தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ராயபுரம் 50 ஆவது அ வட்டம் முருகர் கோவில் அருகே நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை வடக்கு மாவட்ட பிரதிநிதி எஸ்.சுரேஷ் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் தா.இளைய அருணா மற்றும் ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம்ஸ். ஆர்.மூர்த்தி ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை மற்றும் பெண்களுக்கு புடவைகள் என 500 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் ராயபுரம் கிழக்கு பகுதி செயலாளர் இரா.செந்தில்குமார் ராயபுரம் மேற்கு பகுதி செயலாளர் வ.பெ.சுரேஷ், மாவட்ட துணை செயலாளர் மு.கோபி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் நா.சண்முகம், ஐம்பதாவது அ வட்ட செயலாளர் என்.கிருஷ்ணன், 49 வது வட்ட செயலாளர் காட்டன் சதீஷ், 51 வது வட்ட செயலாளர் கண்ணன் பகுதி பிரதிநிதி எஸ்.ரவி உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.