
சென்னை,
கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் உள்ள சென்னை, நெல்லை வேளாங்கண்ணி பள்ளிகள் குழுமம் சார்பில் பள்ளி வளாகத்தில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராசர். முன்னாள் அமைச்சர் கக்கன் ஆகியோர் சிலை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர்
சந்தான முத்து.
தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர்
கே.எஸ் அழகிரி, திருவள்ளூர் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு தலைவர் கோபண்ணா, கக்கன் அவர்களின் மகள் கஸ்தூரிபாய் மற்றும் கக்கன் அவர்களின் பேத்தி சேலம் மாவட்டம் காவல்துறை ஐபிஎஸ், இராஜேஸ்வரி, வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டில்லி பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ். அழகிரி காமராஜர் சிலையை திறந்து வைத்தார். திருவள்ளுவர் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் கக்கன் சிலையை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அதை தொடர்ந்து அழகிரி பேசியது, காமராசர் சிலையை திறந்து வைத்ததில் பெருமை கொள்கிறேன் காமராசர் அவருடைய வாழ்க்கை அரசியல் சமுதாயத்தில் அவர் ஆற்றிய ஈடுபாடு முக்கியமான ஒன்று இந்திய அரசியல் சட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்காக இட ஒதுக்கீடு வழங்குவதற்காக இந்திய அரசியல் சட்டத்தை திருத்துவதற்காக அப்போதைய பிரதமர் நேருவிடம் கோரிக்கை வைத்தவர் தான் காமராசர் இப்படி பல்வேறு திட்டங்களை தமிழகத்தில் கொண்டு வந்தவர் காமராஜர் அதேபோல் கக்கனும் அமைச்சர்களின் சிறந்து விளங்கினார் ஊழல் ஆற்ற நிர்வாகத்தை நடத்தினார் என்று பேசினார். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இறுதியாக செய்தியாளிடம் பேசிய, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்
கே.எஸ்.அழகிரி அவர்கள் பாராளுமன்றத்தில் ராகுல் காந்தியை பேச விடாமல் தடுப்பது நாகரிகம் அற்றது இதுவரை எந்த ஆட்சியாளரும் நாடாளுமன்றத்தில் பேசவிடாமல் தடுத்தது இல்லை ஆனால் பாஜக அரசு செய்து வருகிறது எந்த தவறும் செய்யாத ராகுல் காந்தி ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் ஜனநாயக உரையாற்றியது தவறா தவறுகளை சுட்டிக் காட்டினால் அவர்கள் மீது தேச துரோகம் வழக்கு பதியப்படுகிறது இவ்வாறு அவர் தெரிவித்தார்.