முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா அவர்களின் 75 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வடசென்னை வடகிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் ஏற்பாட்டில் காசிமேட்டில் உணவுத் திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் 1,500 பேருக்கு அசைவ உணவுகள் சிக்கன் முட்டை உள்ளிட்டவை வழங்கப்பட்டது . இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ஏ.கணேசன், ஆர்.கே.நகர் பகுதி செயலாளர் எம்.என்.சீனிவாச பாலாஜி, நித்தியானந்தம், மற்றும் நிர்வாகிகள் டேவிட்ஞானசேகரன், ரவிராஜன், ஜஸ்டின், பிரேம்குமார், ஜெகன், ஏ.விநாயகமூர்த்தி, கே.பி.கர்ணன், சந்ததானசிவா, ஆட்டோ தேவராஜ், மணல்ரவிச்சந்திரன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.