60 ஆண்டு கால எண்ணூர் பகுதி மீனவ மக்களின் வாழ்வாதார பிரச்சனையாக இருந்த எண்ணூர் நெட்டுக்குப்பம் கொசத்தலை ஆற்று முகத்துவாரத்தை தூர்வாரி ஆழப்படுத்தி தூண்டில் வளைவுகள் அமைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றும் வகையில் ரூபாய் 150 கோடி செலவில் முகத்துவாரத்தில் தூண்டில் வளைவு அமைக்கும் பணியையும், கொசஸ்தலை ஆற்றை தூர் வாரி ஆழபடுத்தும் பணியையும் திருவெற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் தொடங்கி வைத்தார். இதில் நெட்டுக்குப்பம் முகத்துவார பகுதியில் நெட்டுக்குப்பம், தாழங்குப்பம், எண்ணூர் குப்பம், முகத்துவார குப்பம், காட்டுக்குப்பம், சின்னகுப்பம், பெரியகுப்பம், சிவன் படை வீதி ஆகிய எண்ணூர் 8 கிராம நிர்வாகிகள் 1 வது வார்டு மற்றும் 2 வது வார்டு மாமன்ற உறுப்பினர்கள் மு.சிவக்குமார்MC, கோமதி சந்தோஷ் குமார்,
. 5 வது வட்ட மாமன்ற உறுப்பினர் கே.பி.சொக்கலிங்கம்MC
14 வது வட்ட மாமன்ற உறுப்பினர் திருமதி பானுமதி சந்தர்MC, மற்றும் வட்ட கழக செயலாளர்கள் மாவட்ட பிரதிநிதிகள் கழக தோழர்கள் மீனவ கிராம பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.