சென்னை திருவொற்றியூர், எண்ணூர் விரைவு சாலையில், கேவிகே. குப்பம் மீனவ கிராமத்தில் மிகவும் பழமையான பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீபடவேட்டம்மன் ஆலயம் அனைத்து மீனவ மக்களின் காவல் தெய்வமாக படவேட்டம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக நிகழ்ச்சி ஏற்பாடுகளை கே.வி.கே. குப்பம் கிராமத் தலைவரும் ஆலய தர்மகர்த்தாவும் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் தலைமையில் படவேட்டம்மன் ஆலயத்தில் 5 யாக சாலைகள் அமைக்கப்பட்டு, நாள்தோறும் கோ பூஜை, கலச பூஜை என பல்வேறு பூஜைகள் நடைபெற்று 27 மார்ச் 2023 காலை 9 மணியளவில் சிவாச்சாரியார் சதீஷ் தலைமையில் படவேட்டம்மன், விநாயகர் முருகன், ராஜகோபுரம், பஞ்ச கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் மத நல்லிணத்தை வலியுறுத்தும் வகையில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் சீர்வரிசையுடன் ஊர்வலமாக வந்து படவேட்டம்மனுக்கு மரியாதை செய்தனர் மற்றும் மீனவ கிராமத்தினர்கள் ஊர் மக்கள் சீர்வரிசை ஏந்தி கோவிலுக்கு வலம் அம்மனிடம் படைத்தனர்

இதில் பகுதியை சார்ந்த மீனவ கிராம தலைவர்கள் கிராம நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *