பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் இயங்கி வந்த சர்மா நகர் மற்றும் இந்திரா காந்தி நகர் ஆகிய இரண்டு இடங்களில் அங்கன்வாடி மையங்கள் மிகவும் பழுதடைந்துள்ளதாகவும் அதனை இடித்துவிட்டு புதிதாக அங்கன்வாடி மையங்களை கட்டித் தர வேண்டும் எனவும் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமிக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர் இதனை ஏற்று பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சர்மா நகர் எஸ் ஏ காலனி எட்டாவது தெருவில் உள்ள அங்கன்வாடி மையம் மற்றும வியாசர்பாடி இந்திரா காந்தி நகர் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் ஆகிய இரண்டு அங்கன்வாடி மையங்களை சீரமைக்க தலா 33 லட்சம் ரூபாய் ஒதுக்கி மொத்தம் 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு அங்கன்வாடி மையங்கள் புதிதாக கட்டப்பட்டன இதனை வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர் டி சேகர் உள்ளிட்டோர் இன்று ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர் இந்த நிகழ்ச்சியில் தண்டையார்பேட்டை மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் பகுதி செயலாளர் ஜெயராமன். மாமன்ற உறுப்பினர் மலைச்சாமி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.