வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வடசென்னை தொகுதிக்குட்பட்ட திருவொற்றியூர் மத்திய பகுதி 5, மண்டலம் 2, வார்டு 21 மணலி பாடசாலை தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி பள்ளிக்கு ருபாய்1கோடி .85. லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி அவர்கள் குத்துவிளக்கேற்றி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்
இந்நிகழ்வில் சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர் திரு. மாதவரம் எஸ். சுதர்சனம் MLA., திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. கே.பி.சங்கர் MLA,,திருவொற்றியூர் 2வது மண்டல குழு தலைவர் மத்திய பகுதி செயலாளர் திரு. ஏ.வி.ஆறுமுகம், திருவொற்றியூர் கிழக்கு பகுதி செயலாளர் திரு. தி. மு. தனியரசு, திருவொற்றியூர் மேற்கு பகுதி செயலாளர் திரு. வை. மா. அருளதாசன், வட்டச் செயலாளர் வார்டு-21 திரு. வ.முத்துசாமி, அனைத்து அணிகளின் சார்ந்த கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.