இந்தியா கூட்டணியின் நீலகிரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் திமுக-வைச்சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராஜா மேலூர் ஒன்றியத்தில் கேத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட பாலடா, அருவங்காடு மற்றும் குன்னூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெட்டட்டி கொணவக்கரை, அரவேனு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.
மேற்கண்ட நிகழ்வுகளில், மாவட்ட செயலாளர் முபாரக், சுற்றுலாத்துறை அமைச்சர் இராமச்சந்திரன், மேலூர் ஒன்றிய நகர செயலாளர் லாரன்ஸ், கேத்தி பேரூராட்சி மன்ற தலைவர் ஹேமாமாலினி, கோத்தகிரி ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன், கிளைக் கழகச் செயலாளர் ஜெயக்குமார், குன்னூர் ஒன்றிய செயலாளர் பிரேம்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சுதாகர், அருவங்காடு மூர்த்தி, மற்றும் தோழமை கட்சியான மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட செயலாளர் குன்னூர் சித்திக், நகர செயலாளர் அன்வர் பாஷா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.