சென்னை சமூக பணி கல்லூரி மற்றும் டாக்டர் கே.என்.ஜார்ஜ் பவுண்டேசன் இணைந்து டாக்டர் கே.என்.ஜார்ஜ் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் நடைபெற்றது.
சென்னை சமூக பணி கல்லூரியின் முதல்வர் ராஜா சாமுவேல் வரவேற்று பேசினார்.
சென்னை சமூக பணி கல்லூரியின் செயலர் முத்துக்குமார் தனு தலைமையுரை நிகழ்த்தினார்.
டாக்டர் கே.என்.ஜார்ஜ் அவர்களின் வாழ்வியல் பங்களிப்பு குறித்து டாக்டர் கே.என்.ஜார்ஜ் பவுண்டேஷன் தலைவர் ஆப்ரஹாம் ஜக்கார்யா பேசினார்.
குழந்தை கடத்தல் தடுப்பில் இளைஞர்களின் பங்கு என்ற தலைப்பில் ஓய்வுபெற்ற டிஜிபி பி.எம்.நாயர் சிறப்புரையாற்றினார்.
இறுதியாக டாக்டர் கே.என்.ஜார்ஜ் பவுண்டேஷன் இணை நிறுவனர் நினன் ஜார்ஜ் நன்றியுரை கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஐ.சி.டபிள்யூ செயலாளர் ஏ.ஜெ.ஹரிஹரன் செய்திருந்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ மாணவியர்கள் கலந்துக்கொண்டனர்.