காலை உணவுத் திட்ட விரிவாக்கம், இடைத்தேர்தல், மின் கட்டணம் மற்றும் பால் தட்டுப்பாடு குறித்து ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கருத்துசென்னை IIC அரங்கத்தில் ஜமாலியாவில்நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநிலத் தலைவர் மௌலவி முஹம்மத் ஹனீஃபா மன்பயீ பல்வேறு மக்கள் நலப் பிரச்சினைகள் குறித்து கருத்துகளைத் தெரிவித்தார்.தமிழ்நாடு அரசின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை வரவேற்ற அவர், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.மேலும், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்கள் தேவையற்ற அரசியல் காரணங்களால் ஏற்படாத வகையில் சட்டங்கள் மற்றும் தேர்தல் நடைமுறைகளில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினார்.மின் கட்டண உயர்வு மற்றும் அறிவிக்கப்படாத மின்வெட்டு குறித்து கவலை தெரிவித்த அவர், நீண்டகாலத் திட்டமிடலுடன் மின்சாரத் துறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.அதேபோல், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிலவும் பால் தட்டுப்பாட்டை அரசு உடனடியாக சரிசெய்து, மக்களுக்கு பால் தங்குதடையின்றி நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *