









உறி அடித்து சமத்துவ பொங்கல் விழாவை துவங்கிய அமைச்சர் சேகர்பாபு
சென்னை ஜமாலியா சோமசுந்தரம் லைன் பகுதியில் திமுக நிர்வாகிகள், முன்களப் பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சமத்துவ பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, மாநகராட்சி மேயர் பிரியா பங்கேற்று பொங்கல் தொகுப்புகளை வழங்கினர்
நிகழ்ச்சியில் உரையாற்றிய மேயர் ப்ரியா
வருடத்தின் 365 நாளும் மக்களுக்கு என்ன நலத்திட்டம் செய்யலாம் என மக்கள் பணியில் இருக்கும் அமைச்சர் என்னை மகளாக நினைத்து எனது அரசியல் பணிகளை ஊக்குவித்து வருவதாக நெகிழ்ந்தார்
அதனைதொடர்ந்து பேசிய அமைச்சர் சேகர்பாபு
இனிய தமிழ் புத்தாண்டோடு சேர்த்து பொங்கல் திருநாளை கொண்டாட உத்தரவிட்ட கலைஞர் உத்தரவுக்கு உயிர் கொடுக்கும் வகையில் தமிழக முதலமைச்சர் ஆணைப்படி தமிழக முழுவதும் பொங்கல் திருநாளை கொண்டாடாத பகுதிகளே இல்லை என்ற வகையில் கொண்டாடப்படுகிறது
ஏதாவது ஒரு வகையில் பொங்கல் திருநாளை தமிழக முதலமைச்சர் துணை முதலமைச்சர் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர் மண்டல உறுப்பினர்கள் என அனைவரும் பொங்கல் பண்டிகை விழாக்களை நடத்தி வருகின்றனர் என்றால் அதை திராவிட முன்னேற்ற கழகமாக தான் இருக்க முடியும்
நிச்சயமாக என் உயிர் உள்ளவரை மேயர் பிரியா அவர்களை மகளாகத் தான் பாவிப்பேன் என்று எடுத்துக் கூறி
எல்லா நிலையிலும் அடுத்த கால் நூற்றாண்டுக்கு இந்த இயக்கத்தை கடத்த வேண்டிய பொறுப்பு தமிழகத்திற்கு உண்டு
அந்நிய ஏகாதிபத்திய காலத்தில் எப்படி வெள்ளையர்கள் ஆட்களை நினைத்தார்களோ அதுபோல் காவி கூட்டம் நம்மை அடிமைப்படுத்த முயற்சிக்கின்றது அந்த கூட்டத்தை முறியடிக்க இன்னும் ஒரு கால் நூற்றாண்டு நாம் பயணிக்க வேண்டி இருக்கிறது அந்த பயணத்தில் இது போன்ற அடுத்த இளைய சமுதாயத்தை உருவாக்க வேண்டிய பொறுப்பு எங்களைப் போன்றவர்களுக்கு உண்டு
அன்புக்குரிய என் ஆருயிர் மகள் என் பிரியா அவர்களை மென் மேலும் இதுபோன்ற நிகழ்வுகளை செய்ய உறுதுணையாக இருப்போம்
தமிழக முதல்வர் இன்று பெற்றுள்ள நம்பிக்கை 200 என்று இருந்ததை 234 ஐ நோக்கி திராவிட முன்னேற்றக் கழகம் நடைபோட்டு கொண்டுள்ளது
எழுச்சியோடு முழுமையாக மக்களோடு நிற்கும் இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம் அஞ்சுவதற்கு யார் ஒன்றும் இல்லை இனி அஞ்சத் தேவையில்லை என்பதற்கு ஏற்ப எதற்காகவும் அஞ்ச மாட்டோம் எதற்கும் தலைகுனிய மட்டும் நேர்கொண்ட பார்வையோடு தமிழக முதலமைச்சர் இரண்டாவது முறையாக ஆட்சி கட்டிலில் அமர்வார்கள் என்று இந்த பொங்கல் விழாவில் சூளுரைக்கிறேன் என்றார்
முன்னதாக பறை இசை முழங்க மயிலாட்டத்துடன் அமைச்சருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.