


திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 5வது வார்டு பாரதியார் நகர் பகுதியில், ரூ.5 கோடி மதிப்பீட்டில் சிறு துறைமுகம் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது இச்சிறு துறைமுகம் அமைக்கப்படுவதன் மூலம் அந்தப் பகுதியின் அடிப்படை வசதிகள் மேம்படுவதுடன் மீனவ மக்களின் பயன்பாட்டிற்காக திட்டமிடப்பட்டுள்ளது
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர், பூமி பூஜையை துவக்கி வைத்து கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்
இந்நிகழ்வில் மேற்கு பகுதி செயலாளர்
வை.ம. அருள்தாசன், ஐந்தாவது வார்டு மாமன்ற உறுப்பினர் கே.பி.சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மற்றும் மீன் பிடித் துறைமுக அதிகாரிகள் R.சீனிவாசன், P.சேனாபதி, B.திருநாகேஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்
இதில் திமுக முக்கிய நிர்வாகிகள் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு பூமி பூஜை நிகழ்ச்சியை சிறப்பித்தனர் ரூ.5 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் இச்சிறு துறைமுகத் திட்டம் பாரதியார் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.