


நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது
திருவொற்றியூர் பிப் 22 நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் அமைப்பு சார்பில் குடும்ப சந்திப்பு விழா சென்னை வேப்பேரி ஒய் எம் சி ஏ அரங்கில் தலைவர் பி.சாம்ராஜ் தலைமையில் நடைபெற்றது செயலாளர் ஆர்.டேனியல் வரவேற்று பேசினார் ஸ்டார்ட் கிறிஸ்தவ கல்லூரியில் படித்த முன்னாள் மாணவ மாணவியர்கள் ஏராளமானோர் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர் தங்களது தற்போதைய நிலை குடும்ப சூழ்நிலை வேலைகள் மற்ற விஷயங்களை ஒவ்வொருவராக வந்து மேடையில் கூறினர் தற்போது கல்லூரியில் பணிபுரியும் பல பேராசிரியர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியின் முன்னாள் மாணவரும் தி. கள்ளிகுளம் தட்சனா மாற நாடார் சங்க கல்லூரி ஓய்வு பெற்ற ஆங்கில பேராசிரியருமான கே. எம். ராபர்ட் சாம்ராஜ் எழுதிய இரண்டு ஆங்கில நூல்கள் வெளியிடப்பட்டன தொடர்ந்து ஆண்டு தோறும் சந்தித்து கொள்ள முடிவு செய்யப்பட்டு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது நிகழ்ச்சியில் பொருளாளர் கே. கே. மோகன் தாஸ் ,ஹென்றிராஜ், சுதர்சன் லிவிங்ஸ்டன், ராஜ் ,மோகன் குமார் உட்பட தமிழகம் மற்றும் இந்தியா மற்ற பகுதிகளில் இருந்து பலர் கலந்து கொண்டனர்
பட விளக்கம்
திருநெல்வேலி தட்சன மாற நாடார் சங்க கல்லூரி முன்னாள் ஆங்கில பேராசிரியர் கே எம் ராபர்ட் சாம்ராஜ் எழுதிய ஆங்கில புத்தகங்கள் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது