
திருத்தணி முருகன் கோயில் பக்தர்கள் வசதிக்கு மினி வேன் இலவசமாக வழங்கிய எல்.ஐ.சி இந்தியா நிறுவனம்………
திருத்தணி- மார்ச்-05
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயில் ஆகும் இந்த திருக்கோவிலுக்கு
ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மற்றும் அண்டை மாநிலத்தில் இருந்தும் வருகின்றனர் அப்படி வரும் வயதான பக்தர்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோர்கள் வசதிக்காக மலைக்கோவில் செக் போஸ்ட் பகுதியிலிருந்து மலைக் கோவிலுக்கு பக்தர்கள் சேவைக்காக
எல்.ஐ. சி.ஆப் இந்தியா சார்பில் மினி வேன் (சிற்றுந்து) ரூபாய் 10 லட்சம் மதிப்புடையது வழங்கும் நிகழ்வு மலைக்கோவிலில் நடைபெற்றது
அந்த சிற்றந்த்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது இதனைத் தொடர்ந்து
இந்த நிகழ்ச்சியில் எல்.ஐ.சி ஆப் இந்தியா நிறுவனத்தின் தென் மண்டல மேலாளர் கே. முரளிதர்,
சிற்றுந்தை முறைப்படி திருக்கோயில் இணை ஆணையர் /செயல் அலுவலர் ரமணி அவரிடம் ஒப்படைத்தார்
இந்நிகழ்ச்சியில் மண்டல கார்ப்பரேட் கம்யூனிகேஷன் மேலாளர் சுசி கிருஷ்ணவேணி, சென்னை கோட்டை இரண்டின் முதுநிலை கோட்ட மேலாளர் ஜி. குமார், வணிக மேலாளர் ராஜகுமார், விற்பனை மேலாளர் சாமந்தி, திருத்தணி கிளை மேலாளர் அகில், எல் ஐ சி முகவர்கள் மற்றும் பக்தர்கள் திருக்கோயில் அர்ச்சகர் கோபி சம்பத் மற்றும் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்….
பட விளக்கம்….
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் சிற்றுந்து எல்.ஐ.சி. ஆப் இந்தியா நிறுவனத்தின் சார்பாக தென் மண்டல மேலாளர் முரளிதர் திருக்கோயில் இணை ஆணையர் செயல் அலுவலர் ரமணி அவரிடம் வழங்கிய போது எடுத்த படம்.