திருவள்ளூர் தென்மேற்கு மாவட்டம் மாதவரம் தெற்கு பகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக சென்னை மாதவரத்தில் இலவச சட்ட ஆலோசனை மையம் திறப்பு விழா!
சென்னை, மாதவரம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இலவச சட்ட ஆலோசனை மையம் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாதவரம் தெற்கு பகுதி இணை செயலாளர் வழக்கறிஞர்T. சரவணன் தலைமையில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினரும், திருவள்ளூர் தென்மேற்கு மாவட்டக் கழகச் செயலாளருமான வழக்கறிஞர் எம்.எல். விஜயப்பிரபு பங்கேற்று இலவச சட்ட ஆலோசனை மையத்தைத் திறந்து வைத்தார்.
சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் கே. தமிழ்வாணன் கலந்து கொண்டார். மேலும், திருவள்ளூர் தென்மேற்கு மாவட்டம் மற்றும் மாதவரம் தெற்கு பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களும் பங்கேற்றனர்
பொதுமக்கள் தங்களது சட்டம் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் சட்டப் பிரச்சினைகளுக்கு உரிய ஆலோசனைகளைப் பெறும் நோக்கில் இந்த இலவச சட்ட ஆலோசனை மையம் தொடங்கப்பட்டுள்ளது திறப்பு விழா நடைபெற்றது.