சென்னை, மணலி, சின்னசேக்காடு, காந்திநகரில் அருள்தரும் ஸ்ரீ சர்வ மங்கள விநாயகர் திருக்கோவில் 04.09.2025 வியாழக்கிழமை காலை 7.00 மணிக்கு மங்கள இசை, விக்னேஷ்வரா பூஜை, புன்யாஹவாசனம், சிவ சூரிய பூஜை, மண்டப பூஜை வேதிகார்சனை, பிம்பசுத்தி, மூர்த்தி ரக்க்ஷாபந்தனம் ஸ்பர்ஸாகுதி, நாடி சந்தானம், இரண்டாம் கால யாக பூஜை, திரவியாகுதி பூர்ணாகுதி, தீபாராதனை, கடம்யாக சாலையில் இருந்து ஆலய புரத்ஷினமாக மூலாலய பிரவேசம் நடைபெற்றது.
காலை 9.00 மணி முதல் 10.30 மணிக்குள் ஸ்ரீ சர்வ மங்கள விநாயகர் மற்றும் விமான கலசத்திற்கு மஹா கும்பாபிஷேகம் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது.
கும்பாபிஷேக சிறப்பு அழைப்பாளர்களாக திருவொற்றியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. K.P.சங்கர்,
மண்டலம் 2-இன் மண்டல் குழுத்தலைவரும் 20-வது வட்ட மாமன்ற உறுப்பினர் A.V.ஆறுமுகம்,
22 வது வட்ட மாமன்ற உறுப்பினர்
அ.தீர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
12 மணிக்கு மேல் பீனா நிர்மல் ராஜ், சசிகலா குலோத்துங்கன், சுதா ராஜகுமார் ஆகியோர் இணைந்து சமபாந்தி போஜனம் வழங்கினார்கள்
இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ சர்வ மங்கள விநாயகர் ஆலய அறக்கடளை நிர்வாகிகள்
தலைவர் E.மாரிமுத்து
செயலாளர் M.நாகராஜ் பொருளாளர் G.கார்த்திக்
துணைத் தலைவர் M.சதிஷ்குமார் துணை செயலாளர் S.ஒட்டக்கூத்தன் மற்றும்
செயற்குழு உறுப்பினர்கள்
A.ஏசு
E.செல்லா Ex. M.C.
M.குமரேசன்
D.சுந்தரமூர்த்தி
C.சுரேஷ் மற்றும் ஸ்ரீ சர்வ மங்கள விநாயகர் திருக்கோவில் நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.