காங்கிரஸ் கட்சி சார்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து மாத்தூரில் ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை குறித்து அவதூறு பேசியதாக அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து சென்னை மாதவரம் அடுத்த மாத்தூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர்.எம்.தாஸ் தலைமையில் மாத்தூர் எம்எம்டிஏ மெயின் ரோடு பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை குறித்து அவதூறு பேசியதாக அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
வழக்கறிஞர் மாத்தூர் பி.எஸ்.தமிழரசன் நிகழ்ச்சி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய ராஜீவ் காந்தி யாத்திரை அறக்கட்டளையின் தலைவர் ஆர்.துரை வேலு மாதவரம் மத்திய சர்க்கிள் தலைவர் ஆர்.வெங்கடேசன் பொதுச் செயலாளர்கள் வழக்கறிஞர் அருணாச்சலம்,காங்கை குமார், ஆர்.ஆர்.சி.சாந்தகுமார் வெங்கடேசன் மாதவரம் கிழக்கு சர்க்கிள் தலைவர் எஸ்.அருண்குமார். மாவட்டத் துணைத் தலைவர்கள் மாத்தூர் ரங்கநாயகி, மாவட்ட துணைத் தலைவர் V.வெங்கடேசன் , வழக்கறிஞர் புழல் ஜெயசீலன், எஸ்.ஷேக் ஜிலானி, கிரிதரன் மாவட்ட துணை தலைவர் நித்யா புழல் வட்டாரத் தலைவர் உள்ளிட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.