மணலியில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி அவர்களின் கோரிக்கையை ஏற்று மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் எம்.பி.அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் 1.51 கோடி மதிப்பீட்டில் பள்ளி கட்டிடம் அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது
வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி அவர்களின் கோரிக்கையை ஏற்று மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் எம்.பி.அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் 1.51 கோடி மதிப்பீட்டில் பள்ளி கட்டிடம் அடிக்கல் நாட்டும் விழா
வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களின் கோரிக்கையை ஏற்று கழக மாநிலங்களவை உறுப்பினர், மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 1கோடியே 51 லட்சங்கள் செலவில் திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதி மண்டலம் – 2, வார்டு – 21க்கு உட்பட்ட மணலி பாடசாலை தெருவில் உள்ள சென்னை தொடக்கப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள், கட்டும் பணிக்கு சென்னை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்.எல்.ஏ., வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். கலாநிதி வீராசாமி திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் ஆகியோர் முன்னிலையில் மாநிலங்களவை உறுப்பினர், மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் அடிக்கல் நாட்டினார்
இந்நிகழ்வில் பகுதிக் கழகச் செயலாளரும், மண்டலக் குழுத் தலைவருமான ஏ.வி.ஆறுமுகம் எம்.சி., வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., பகுதிக் கழக நிர்வாகிகள் வ.முத்துசாமி, எம்.எஸ்.நாகலிங்கம், ரமேஷ் குமார், தினகரன், துர்காபாய், வட்டக் கழகச் செயலாளர்கள் முத்துசாமி, சாலை கணேசன், கரிகால சோழன், மண்டல அலுவலர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் என அனைவரும் கலந்து கொண்டனர்.