ஆகஸ்டில் தமிழ் எழுத்தாளர் மாபெரும் பட்டறை: மலேசிய மனிதவள அமைச்சர் சிவக்குமார் அறிவிப்பு
சென்னை, ஏப்ரல் 2023: மலேசியத் திருநாட்டில் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் எழுத்தாளர்களுக்காக மாபெரும் பட்டறை வரும் ஆகஸ்ட் மாதம் நடத்தப்படும் என்று மலேசிய மனிதவள அமைச்சர் வி. சிவக்குமார் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
தமிழ் எழுத்தாளர்களுக்காக மலேசியாவில் பெரிய அளவில் பட்டறை நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்தப் பயிற்சி பட்டறை மிகப்பெரிய அளவில் நடத்தப்படும் வேளையில் இதில் அனைத்து எழுத்தாளர்களும் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படும் .
பயிற்சி பட்டறை மூலம் தேர்வு செய்யப்படும் பத்து எழுத்தாளர்களின் புத்தகங்கள் சிறந்தவையாக தேர்வு செய்யப்படும். இந்த பத்து புத்தகங்களுக்கான பதிப்புச் செலவு முழுவதையும் நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று பலத்த கரவொலிக்கிடையே மனிதவள அமைச்சர் சிவக்குமார் அறிவித்தார்.
இந்நாட்டில் தமிழ் படைப்புகளுக்கு உயிர் கொடுக்கும் வகையில் தாம் இந்த முயற்சியை கையில் எடுத்திருப்பதாக அவர் சொன்னார்.