5 வயது சிறுவன் தேவ்தர்ஷன்

3 மணி நேரம் தண்ணீரில் மிதந்து ஆசிய சாதனை

செங்கல்பட்டு மாவட்டம் இசிஆர் நெம்மேலி குப்பத்தைச் சேர்ந்த முத்து குமரன் – திவ்யபிரபா தம்பதியின் ஐந்து வயது குழந்தையான தேவ்தர்ஷன் தொடர்ந்து மூன்று மணி நேரம் தண்ணீரில் மிதந்து இந்தியா மற்றும் ஆசிய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனை படைத்தார்.

சாதனை நிகழ்ச்சி இன்று சேப்பாக்கத்தில் உள்ள அண்ணா நீச்சல் குளத்தில் நடைபெற்றது.

அர்ஜுனா விருது பெற்ற முன்னாள் நீச்சல் வீரர் வில்சன் செரியன், தமிழ்நாடு மாநில நீச்சல் சங்க செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலையில் துவங்கிய இந்த சாதனை நிகழ்ச்சி காலை 7.10 மணிக்கு துவங்கி 10.12 மணிக்கு நிறைவு பெற்றது.
அதுவரை மூன்று மணி நேரம் தண்ணீரில் மிதந்து கிடந்தார்.

இதனை தொடர்ந்து சிறுவன் தேவ்தர்ஷனுக்கு சாதனை விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் இந்தியா மற்றும் ஆசிய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் பிரதிநிதி விவேக் ஆர்.நாயர், சிறுவன் தேவ்தர்ஷன் சாதனையை அங்கீகரித்து சான்றிதழ் வழங்கினார்.

பெருநகர சென்னை மாநகராட்சி துணை தலைவர், மாநகராட்சி மன்ற உறுப்பினர் ஏஆர்பி. எம்.காமராஜ், தமிழ்நாடு மாநில நீச்சல் சங்க செயலாளர் டி.சந்திரசேகரன், குழந்தை தேவ் தர்ஷன் படித்து வரும் சைதன்யா பள்ளி (மைலாப்பூர்) முதல்வர் ஸ்ரீதேவி சேதுராமன், பயிற்சியாளரும் சாதனை சிறுவனின் தாத்தாவுமான கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்ட பலர் சிறுவன் தேவ்தர்ஷன் சாதனையை பாராட்டினர்.

சிறுவனின் சாதனை நிகழ்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருந்த மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி ஸ்டேடிய அதிகாரி ஆர். லோகநாதன், நீச்சல் பயிற்சியாளர்கள் ஆர்.மோகன், ஏ.காமராஜ், டி.தமிழ்வாணன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். இவ்விழாவில் பெருந்திரளான மக்கள் பங்கேற்று சிறுவனின் சாதனையை பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *