ராகுல் காந்தி கைதை கண்டித்து வடசென்னை மேற்கு மாவட்டம் சார்பில் தொடர் உண்ணாவிரத போராட்டம்
பிகாரில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரதிருத்த பணிக்கு எதிராக தேர்தல் கமிஷனை கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடைபெற்றது
அப்போது போலீசாருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
இதனையடுத்து ராகுல் காந்தி உட்பட தமிழக எம்.பி க்கள் உள்ளிட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்
இதனை கண்டித்து பல்வேறு இடங்களில் காங் கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
அந்த வகையில் வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் J.டில்லி பாபு தலைமையில் பெரம்பூர் மாதவரம் நெடுஞ் சாலை பகுதியில் உள்ள மூன்று சிலை அருகே ஜனநாயகத்தை சீர்குலைத்து உரிமையை பறிக்கின்ற பாசிச பாஜக மோடி அரசை கண்டித்து தொடர் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது
இதில் காங்கிரஸ் கமிட்டி மாநில நிர்வாகிகள், மாவ ட்ட நிர்வாகிகள், சர்க்கிள் தலைவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்ட னர்
தொடர்ந்து ஒன்றிய அரசால் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வஞ்சிக்கப்படு வதை கண்டித்து இந்த தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருவதாகவும் விரைவில் பொதுமக்களின் ஒத்துழைப்போடு பாஜக அரசுக்கு உரிய பாடம் புகட்ட வேண்டிய காலம் வந்துவிட்டது எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர்J.டில்லி பாபு தெரிவித் தார்.