சென்னை கொடுங்கையூர் எழில் நகரில் அருள்மிகு ஸ்ரீ பவானி அம்மன் திருக்கோவில் 40 ஆம் ஆண்டு ஆடி பெருந்திருவிழா 6வது வாரம்சென்னை கொடுங்கையூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பவானி அம்மன் திருக்கோவில் 40 ஆம் ஆண்டு ஆடிப்பெரும் திருவிழா 6வது வாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது இவ்விழாவினை பாக்கியலட்சுமி மைக்ரோ பைனான்ஸ் உரிமையாளர் சி.ஈஸ்வர பாலன் குடும்பத்தினர் தலைமையில் வெகு விமர்சையாகவும் சிறப்பாகும் ஏற்பாடு செய்திருந்தனர் இவ்விழாவில் அம்மனுக்கு கலசநீர் ஊர்வலம் மற்றும் சிறப்பு ஆராதனை அதனைத் தொடர்ந்து சமபந்தி அன்னதானம் அனைத்தையும் பாக்கியலட்சுமி மைக்ரோ பைனான்ஸ் உரிமையாளர் சி. ஈஸ்வர பாலன், மற்றும் குடும்பத்தினர் ஈ. பாக்கியலட்சுமி, ஈ. ஆகாஷ், ஈ. அஸ்வினி, சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் விழாவிற்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்களை கௌரவித்தல் மற்றும் அன்று ஒரு நாள் முழுவதும் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரங்கள், வான வேடிக்கைகள், ஊர்வலம் மற்றும் பொதுமக்களுக்கு பிரசாதங்கள் அனைத்து ஏற்பாடுகளையும் பாக்கியலட்சுமி பைனான்ஸ் குழுமத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர் இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு இந்து திருக்கோவில் கூட்டமைப்பு சமூக அறக்கட்டளை என். நடராஜன், சி, சக்திவேல், சுயம்பு, எழில் நகர் பகுதி சுற்றுவட்டார அனைத்து வியாபாரிகள் பொதுநல சங்க தலைவர், எஸ். ராஜாமணி, எஸ்.ஏ. ராஜ், மீனா சந்திரன், அசோக் குமார், வீரா,தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட இணை செயலாளர் மற்றும் ஆலய நிர்வாகிகள் ஜி. செல்வராஜ், ஜீ.வி.கோபால், பொதுமக்கள் என ஏராளமான பேர் கலந்து கொண்டனர். இதில் சுமார் 5000 பேருக்கு சமபந்தி அன்னதானம் வழங்கப்பட்டது இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இறுதியில் பாக்கியலட்சுமி மைக்ரோ பைனான்ஸ் குழுவினர் நன்றியை தெரிவித்தனர்.