திருவொற்றியூரில் நீத்தவர்களுக்கு சுனாமியால் உயிர் கே குப்பன் ex MLA தலைமையில் அதிமுகவினர் அஞ்சலி .
26.12.2022 இந்தியாவில் சுனாமி தாக்குதலால் 18 ஆண்டுகளுக்கு முன்பு ஏராளமானோர் உயிரிழந்தனர் ஆண்டுதோறும் உயிரிழந்தவர் நினைவாக மீனவர்களும் பல்வேறு அரசியல் கட்சியினரும் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர் தமிழகமெங்கும் கடற்கரையோர மீனவ கிராமங்களில் சுனாமியால் இறந்து போனவர்கள் படங்களை வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தி வருகின்றனர் . இதன் தொடர்ச்சியாக திருவொற்றியூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே . குப்பன் வருடம்தோறும் டிசம்பர் 26 ஆம் தேதி சுனாமியால் இறந்தவர்களுக்கு மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் டாக்டர் கே கார்த்திக் முன்னிலையில் திருவொற்றியூர் பட்டினத்தார் கோவிலிலிருந்து ஏராளமான பெண்கள் பால்குடம் தூக்கி ஊர்வலமாக சென்று திருவொற்றியூர் குப்பம் பகுதி கடலில் பால் ஊற்றி மலர் தூவி சுனாமியால் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர் . தொடர்ந்து பைபர் படகில் ஏறி கடலுக்குள் சென்று சுனாமியால் உயிர் நீத்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தும் விதமாக கடலில் படகில் நின்றபடி அஞ்சலி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது . தொடர்ந்து மீனவ சமுதாய பொது மக்களுக்கு நல உதவி திட்டமாக புடவை வேஷ்டிகளை வழங்கினார் இந்நிகழ்ச்சியில் திருவொற்றியூர் பகுதி அதிமுகவினர் பெருவாரியாக கலந்து கொண்டு கொண்டார்கள்