
ன் படி மதுபானக் கடைகளை மூட பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு ஆட்சேபணை தெரிவித்தல் மற்றும் கால அவகாசம் கோருதல் -தொடர்பாக.
தமிழ்நாடு அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் டாஸ்மாக் நிறுவனம், சில்லறை மது விற்பதற்காக தனியார்களின் இடங்களை தேர்வு செய்து மதுக்கடையும், அதனுடன் இணைந்த மதுக்கூடங்களை நடத்தி வருகிறது. இவ்விடத்தை டாஸ்மாக் நிறுவனம் தேர்வு செய்து கடை ஆரம்பிக்க பல வகை அதிகாரிகளின் நேரடி பார்வைக்கு உட்பட்டு இடம் தேர்வு செய்யப்படுகிறது. (மாவட்ட மேலாளர், காவல்துறை, தாசில்தார், மாவட்ட ஆட்சியர், மேலாண்மை இயக்குநர்) இத்தனை பேரிடம் முறையாக அனுமதி பெற்று (டாஸ்மாக் விதி எண்.2003, 18(1)-ன்படி குறிப்பிட்ட மதுக்கடையில் இருந்து 50 மீட்டருக்குள் வழிபாட்டு தலங்களோ, கல்வி நிலையங்களோ அமைய பெற்றிருக்க கூடாது)
பேரூந்து நிலையம் அருகில் இருக்க கூடாது என்று குறிப்பிடவில்லை.
50 மீட்டர் இடைவெளி போதும் என்ற நிலையில் தற்போது 500 மீட்டர் தொலைவை கணக்கிடுவது சாத்தியமற்றது.
இந்நிலையில் புதியதாக முதல்வர் பதவி ஏற்றிருக்கும் முதல்வர் C.ஜோசப் விஜய் அவர்களின் அவசர கால நடவடிக்கையின் படி 12-05-2026 அன்று மதுக்கடைகள் குறைப்பு என்று அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அதிகாரிகளின் தவறான கணக்கின்படி பேரூந்து நிலையமா? பேரூந்து நிறுத்தமா? பேரூந்து முனையமா? என்று தெரியாமலும் அறநிலையத் துறைக்கு சம்பந்தம் / பாத்தியம் இல்லாத சிறு கோவில்கள் வழிபாட்டுதலங்களின் அருகில் புகார் ஏதும் இல்லாத கடைகளை மூடப்படும் கடைகளின் பட்டியலில் தவறாக சேர்த்துள்ளனர், இந்த தவறினை சுற்றிக்காட்டி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால் இப் பட்டியலானது மேலாண்மை இயக்குநரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை தற்போது சரிசெய்ய மேலாண்மை இயக்குநர் தான் முடிவெடுக்க முடியும் என்று தெரிவித்தனர்.
இப்பட்டியலின்படி கடைகள் மூடப்பெற்றால் பிற கடைகள் நடத்தும் கடைக்காரர்களுக்கு பெரும் இன்னல்களை சந்திக்க நேரிடும், மாதாந்திர DD அதிரிக்கும் நிலை ஏற்படும். கட்டுக்கடங்காத கூட்டம் கூடினால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும், கூட்ட நெரிசலில் கடைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள இயலாது, மேலும் எங்களால் கடை நடத்த இயலாமல் போனால் கள்ளத்தனமாக வியாபாரம் செய்யும் நபர்கள் தான் கொள்ளை லாபம் அடைவார்கள்.
ஆகையால் தாங்கள் தான் இவ் அவசர நடவடிக்கையின் மீது (தவறாக கணக்கிட்ட கடைகளை நீக்கி) பொறுமையாக கையாண்டு நல்ல முடிவினை எடுத்து புதிய அரசின் பெயருக்கு எவ்வித களங்கம் இன்றி எங்கள் கோரிக்கைகளின் மீது தக்க முடிவெடுக்குமாறு தங்களை வேண்டுகிறோம்.