தமிழக பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில்  பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென்னின்  திருவுருவ படத்திற்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளருக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. இந்திய சட்ட ஆணையமே பொதுச்செயலாளர் என்ற அடிப்படையிலே கடிதம் அனுப்பியுள்ளது.இது மத்திய அரசின் அங்கீகாரம் என்ற அடிப்படையில் இதனை எடுத்துக்கொள்ளலாம் இந்திய தேர்தல் ஆணையம் இந்த கூட்டத்தை நடத்தினாலும்கூட மாநில தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்புகிறது. இந்த கடிதத்தினால் எந்த தாக்கமும் ஏற்படபோவதில்லை,. எங்களை பொறுத்தவரையில் எங்கள் கட்சி கொடி சின்னம், எங்களுடைய ஒற்றுமை அனைத்தும் எடப்பாடியார் தலைமையில் சிறப்பாக இயங்கிகொண்டுள்ளது.மேற்கொண்டு அந்த கடிதத்தின் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து கட்சி முடிவு செய்யும்.

கேள்வி : தேர்தல் ஆணையம் இது  தொடர்பாக முடிவு எடுக்கவில்லை என்று எடுத்துக்கொள்ள முடியுமா
பதில் : அப்படி எடுத்துக்கொள்ள  முடியாது. இந்திய தேர்தல் அனுப்பியிருந்தால் நீங்கள் குறிப்பிடுவது சரி.இந்திய தேர்தல் ஆணையம் இதனை அனுப்பவில்லை.இந்த கடிதத்தை அனுப்பியது மாநில தேர்தல் ஆணையம்தான். மாநில தேர்தல் ஆணையம் அனுப்பியது என்று சொல்லும்போது நாம் இதனை பெரியதாக எடுத்துக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.

கேள்வி : நாங்கதான் கட்சி என்று ஓ.பி.எஸ்.உறுதியாக உள்ளாரே
பதில் :  வீடு இருக்கிறது என்றால் உரிமையாளர் நாங்கள் என்று பெருமைப்படுகிறோம். நீங்கள் உரிமையாளர் என்றால் நான்குபேர் சிரிக்கதான் செய்வார்கள்.
கேள்வி : இடைநிலை ஆசிரியர்கள் நான்கு நாட்களாக போராட்டம் நடத்திவருகிறார்களே
பதில் : இந்த அரசை பொறுத்தவரையில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது கிடையாது. சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வைத்து 27 ம் தேதியன்று டிபிஐ வாளாகத்திலே தொடங்கிய இந்த உண்ணாவிரத்தை தொடங்கியுள்ளார்கள். அதிகாரிகள் மட்டத்தில் ஒரு கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அமைச்சர் அழைத்து பேசவில்லை,அமைச்சரை பொறுத்தவரையில் உதயநிதியின் ரசிகர்மன்ற தலைவராக இருப்பதால் அவர் அந்த வேலையைதான் பார்ப்பார். ஆசிரியர்களை பார்ககபோவதில்லை. சரி முதல்வராவது அழைத்து பேசுவாரா என்றால் அவரும் அழைத்து பேசவில்லை.27 ம் தேதி தொடங்கிய இந்த உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டவர்களில் 130 க்கும் மேற்பட்டவர்கள் இன்றைக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை அளிக்கப்பட்டுள்ளது அவர்கள் கோரிக்கை என்பது 2009 ல் ஏப்ரல் மாதத்திற்கு முன்னரும்,மே மாதத்திற்கு பின்னரும் பணியில் சேர்ந்தவர்கள்.இதனை இரண்டு வகையில் பிரித்து பார்க்ககூடாது எல்லோருக்கும் சம ஊதியம் என்ற அடிப்படையிலே போராட்டம் நடத்துகிறார்கள்.ஏன் இந்த அளவுக்கு போராட்டம் செய்கிறார்கள் என்றால் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் சொல்லியிருக்கிறார். எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஊர்தோறும் கூட்டம்போட்டு நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடம் சம வேலை,சம ஊதியத்தை கண்டிப்பாக தருவோம்  என்றார். இதனை செய்துவிட்டு போகவேண்டியதுதானே.அவர்கள் கேட்பது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவேண்டும் என்பதுதான். ஆனால் இந்த விடியா அரசை பொறுத்தவரையில் தேர்தல் வாக்குறுதி அவர்களுக்கு மட்டுமல்ல யாருக்குமே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல்,எல்லோருக்குமே ஏமாற்றத்தை தருகின்ற வகையில்தான் இந்த அரசின் செயல்பாடு உள்ளது.

கேள்வி : நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாஜக அலுவலகம் வந்துள்ளீர்களே
பதில் : இதில் என்ன உள்ளது.பிரதமரின் தாயார் இறந்துள்ளார். நட்பு ரீதியாக இன்றைக்கு மரியாதையைக்  கழகத்தின் சார்பாகச் செலுத்தியுள்ளோம்.

கேள்வி : சிறுபான்மை ஆணையத்தின் துணைத்தலைவர் கொலை செய்யப்பட்டுள்ளாரே
பதில் : முதலில் இதுபோன்ற செய்தி வரவில்லை.தற்போது கொலை செய்யப்பட்டதாகச் செய்தி வந்துள்ளது. விசாரணை இருக்கும்போது அதன் உள்ளே போகமுடியாது.ஆனால் எது எப்படி இருந்தாலும் சரி சட்டம் ஒழுங்கு மிக மிக மோசம் என்பதற்கு ஒரு அடையாளமாகத்தான்  இருக்கிறது.இன்றைக்கு  அவர்களின் கட்சியை சேர்ந்தவர்களையே காப்பாற்ற முடியாத ஒரு வக்கில்லாத,துப்பில்லாத ஒரு அரசுதான் இன்றைக்கு நாட்டு ஆண்டுக்கொண்டுள்ளது கேவலம்
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *