ஆடி கிருத்திகையை முன்னிட்டு பட்டாளம் சுப்ரமணியன் கோயிலில் 300 பேர் பால்குடம் அன்னதானம்
அதிமுக மாவட்ட செயலாளர் பாலகங்கா பங்கேற்பு சிறப்பித்தார்.
சென்னை ஜூலை 30
ஆடி கிருத்திகையை முன்னிட்டு பட்டாளம் சுப்ரமணியன் கோயிலில் 300 பேர் பால்குடம் எடுத்தனர் அதைத்தொடர்ந்து மாவட்ட செயலாளர் பாலகங்கா அன்னதானம் வழங்கினார்.
பட்டாளம் புளியந்தோப்பு பகுதியில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ வள்ளி தெய்வசேனா சமதே செல்வ சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் 15ஆம் ஆண்டு ஆடி கிருத்திகை ஒட்டி சூலை அங்காளம்மன் கோவிலில் இருந்து 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் ஏந்தி பட்டாளம் வழியாக ஊர்வலமாக வந்து சுப்ரமணிய சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இந்து சத்திய சேனா நிறுவனத் தலைவர் ராம பூபதி தேனீர் வழங்கினார் அதனைத் தொடர்ந்து தட்சிணாமூர்த்தி திருமண மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அன்னதான நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக அதிமுக மாவட்ட செயலாளர் பாலகங்கா, பகுதி கழகச் செயலாளர் துரைராஜ், வட்ட கழக செயலாளர் நூருல்லா, மற்றும் விழாவினை தலைமை ஏற்றி நடத்திய திருக்கோவில் தர்மகர்த்தா கே,ரகு விஜயா, விழாவை சீரும் சிறப்புமாக நடத்தினார் இவ்விழாவில்முக்கிய பிரமுகரும் இந்து சத்திய சேனா நிறுவனத் தலைவர் இராம பூபதி அவர்கள் பங்கேற்று விழாவினை சிறப்பித்தார் விழா நடைபெற்றது.