வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக செயல்வீரர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
சென்னை, தண்டையார்பேட்டை, தனியார் திருமண மண்டபத்தில் வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம் எஸ். திரவியம் தலைமையில் செயல்வீரர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராஜேஷ் குமார், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், மாநில செயலாளர் சிரஞ்சீவி, முன்னாள் மாநில தலைவர் முன்னாள் கே வி. தங்கபாலு, வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அசன் மௌலானா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் கட்சி வளர்ச்சி குறித்து சிறப்புரை ஆற்றினர். மாநில பொதுச் செயலாளர் மதரம்மா கனி மற்றும் மாவட்ட துணை தலைவர் பாரூக் ஆகியோர் தலைமையில் செல்வ பெருந்தகையிடம் நடைபயணத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் மற்றும் செங்கோல் வழங்கினர்.