
சென்னை மணலி 2வது மண்டல அலுவலகத்தில் மாமன்ற கூட்டம்
முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவபடம்
த.வெ.க.கட்சி எதிர்ப்பை மீறி வைக்கப்பட்டது
சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் திருவொற்றியூரில் 14வார்டுகளும் மணலியில் 8 வார்டுகளும் உள்ளன இங்கு திமுக தலைவர் உட்பட நான்கு கவுன்சிலர்களும் அதிமுக மூன்று கவுன்சிலர்களும் காங்கிரஸ் ஒரு கவுன்சிலர் உள்ளனர் அதிமுக கவுன்சிலரான முல்லை ஆர். ஜி. ராஜேஷ்சேகர் கடந்த வாரம் தமிழக வெற்றி கழக கட்சியில் இணைந்தார்
இந்தசூழ்நிலையில் சட்டமன்ற தேர்தல் முடிவுற்றபின் நடைபெற்ற முதல் மண்டல கூட்டம் 2வது மண்டல குழு தலைவர் ஏ.வி. ஆறுமுகம் தலைமையில் மண்டல அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது
கூட்டம் தொடங்கியதும் தலைவர் ஏ.வி. ஆறுமுகம் தனது இடதுகை பக்கத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவபடத்தை வைத்துகொண்டார். அரசு உத்தரவு அடிப்படையில் மன்ற கூடத்தில் முதலமைச்சர் ஜோசப்விஜய் படம் மட்டும் வைக்கப் பட்டிருந்தது
கூட்டம் தொடங்கியதும் இதுகுறித்து கவுன்சிலர் ராஜேஷ்சேகர் மன்றகூடத்தில் எப்படி நீங்கள் முன்னாள் முதலமைச்சர் படத்தை வைக்கலாம் என்று கேள்வி எழுப்பினார் அதற்கு மண்டல குழு தலைவர் ஏ. வி.ஆறுமுகம் அது எனது விருப்பம் என்றார் படத்தை வைத்துகொள்வ தற்கு சட்டத்தில் இடம் உள்ளதா என்று கேட்டதற்கு உள்ளது என்று அதற்கான ஆதாரத்தை காட்டினார்
உடனே திமுக கவுன்சிலர் காசிநாதன் இந்த மன்றத்தில் நாங்கள்தான் பெரும்பான்மையாக உள்ளோம் அதனால் நாங்கள் எங்கள் இஷ்டப்படி வைப்போம் என்று கூறினார்
அதேபோல் பெண் கவுன்சிலர் நந்தினி கடந்த4 ஆண்டு களில் அம்மா உணவகங்களில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா படம் உள்ளது நாங்கள் அதை எடுத்தோமா என்று கேட்டார்
இந்த விவாதம் நடந்து கொண்டு இருந்தபோது அங்கிருந்த அதிமுக கவுன்சிலர்கள் காங்கிரஸ் கவுன்சிலர் யாரும் விஜய் கட்சியினருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை
உடனே தலைவர் ஆறுமுகம் தனது இடதுகை அருகில் இருந்த முன்னாள் முதலமைச்சர் உருவபடத்தை மன்ற கூடத்தில் மாட்ட உத்தர விட்டார். அதன்அடிப்படையில் முதலமைச்சர் ஜோசப்விஜய் படம் அருகில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படம் மாட்டப்பட்டது இந்தநடவடிக்கைக்கு திமுக தரப்பில் மண்டல குழு தலைவருக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது மாமன்ற கூட்டம் நடைபெற்றது.