சென்னை திருவொற்றியூர் திமுக சார்பாக கே,பி, சங்கர் எம்,எல்,ஏ தலைமையில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
இந்தியாவில் சுனாமி தாக்குதலால் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஏராளமானோர் உயிரிழந்தனர் ஆண்டுதோறும் உயிரிழந்தவர்களின் நினைவாக மீனவர்களும் அரசியல் கட்சியினரும் அஞ்சலி செலுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர் இதன் தொடர்ச்சியாக சென்னை திருவொற்றியூர் கே,வி,கே, குப்பத்தில் சட்டமன்ற உறுப்பினர் கே,பி, சங்கர், தலைமையில் ஏராளமானோர் பால்குடம் ஏந்தி மௌன ஊர்வலத்தில் மலர் வளையம் எடுத்துச் சென்று கடலில் பால் ஊற்றி மலர் வளையம் வைத்து மலர் தூவி சுனாமியால் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தினர் இந் நிகழ்ச்சியில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர், எஸ், பாரதி, திருவொற்றியூர் தொகுதி பொறுப்பாளர் ஆரம்பாக்கம் கே, ஆறுமுகம், ராமநாதன், மாமன்ற உறுப்பினர் கே,பி, சொக்கலிங்கம், ஆர்.டி மதன் ஏகா.கார்த்திகேயன், எழும்பூர் கோபி கருணாநிதி , இரா.முருகேசன் கே.கார்த்திகேயன், விஜயராகவன், பாலா, மகேந்திரன்,
செல்வம், நிர்மல் தாஸ், உள்ளிட்டவர்களூடன் ஏராளமான பெண்கள் திமுகவினர் கலந்து கொண்டார்கள் தொடர்ந்து திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் கே,பி, சங்கர் எம்,எல்,ஏ, ஏற்பாட்டில் நடைபெற்ற நல உதவி வழங்கும் நிகழ்ச்சியில் சுயதொழில் செய்து வாழ்வில் உயர நலிந்தவர்களுக்கு தையல் மிஷின் அயர்ன் பாக்ஸ் வழங்கினார் ஆர், எஸ், பாரதி, ஏராளமானவர்களுக்கு புடவை மற்றும் அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன இந்நிகழ்ச்சியில் எம்,ஆர்,எப், நிர்வாக அதிகாரிகள் பலர் கலந்து கொண்டார்கள்.