1வது வட்டக் கழக திமுக சார்பில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களின் முயற்சியால் சி.பி.சி.எல் நிறுவனத்தின் சமூக பாதுகாப்பு நிதி (CSR) மூலம் திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட எண்ணூர் தாழங்குப்பம் ஜே.ஜே.நகர் பகுதியில் ரூபாய். 2கோடியே 50 லட்சங்கள் செலவில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணிக்கு திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினரும் மாநில மீனவரணி துணைத் தலைவருமானகே.பி.சங்கர் முன்னிலையில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமிM.Pஅவர்கள் அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார்
இந்நிகழ்வில் பகுதிக் கழகச் செயலாளர்கள் வை.ம. அருள்தாசன், பகுதி அவைத் தலைவர் ந.திருசங்கு, பகுதி பொருளாளர் வஜ்ரவேல், பகுதி துணை செயலாளர் குமரவேல், மாவட்ட பிரதிநிதிகள் சந்திரகுமார், ராம்குமார்,வட்டக் கழகச் செயலாளர்கள் சிவகுமார் எம்.சி., வட்ட அவைத் தலைவர் முனுசாமி, மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் தியாகராஜன், மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர்கள் செல்வம், மகேந்திரன், மண்டல அலுவலர்கள், மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.