முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 54வது நினைவுநாளில், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் இராயபுரம்R.மனோ ஏற்பாட்டில் 54.இராஜாஜிசாலையில், அலங்கரிக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து மதியஉணவு வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், வடசென்னை தெற்கு(கிழக்கு) மாவட்டச்செயலாளரும், கழக அமைப்புச்செயலாளருமான D.ஜெயக்குமார், முன்னாள் ராஜ்யசபா உறுப்பினரும், வடசென்னை தெற்கு(மேற்கு) மாவட்டச்செயலாளரும், கழக அமைப்புச்செயலாளருமான நா.பாலகங்கா மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பெருந்திரளாக கலந்துக்கொண்டார்கள்.