சென்னை மணலியில் சுதந்திரப் போராட்ட தியாகி இம்மானுவேல் சேகரனார் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்த தமிழக முதலமைச்சர் துணை முதலமைச்சர் ஆகியோருக்கு தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் சார்பாக நன்றி தெரிவிப்பு விழா நடைபெற்றது

சென்னை மணலியில் தேவேந்திர குல வேளாளர் சமூகம் சார்பில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பு
கழக மாநில மீனவர் அணி துணைத்தலைவர் திருவொற்றியூர் கே,பி, சங்கர் எம்,எல்,ஏ, தலைமையில் அறுசுவை உணவு வழங்கினார்
சுதந்திர போராட்ட தியாகி இமானுவேல் சேகரனார் 100வது பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு
தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் சார்பாக நன்றி தெரிவிப்பு விழா சென்னை மணலியில் பாடசாலை சாலை மணலி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் திமுக மாநில மீனவர் அணி துணை தலைவர் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே,பி, சங்கர் எம்,எல்,ஏ, கலந்து கொண்டு இம்மானுவேல் சேகரன் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி 1000 நபர்களுக்கு அறுசுவை உணவை வழங்கினார்
இதில் முன்னிலை வகித்தவர்கள் வேல்முருகன், 2வது மண்டல குழு தலைவர் ஏ,வி, ஆறுமுகம், 22 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஏ, திர்த்தி, 18 வது வார்டு மாமன்ற உறுப்பினர் எம், ஸ்ரீதரன், பொருளாளர் ராதாகிருஷ்ணன் , சேதுராமன், வீரா, குமார், தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் மற்றும் பொதுமக்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *