ஈழ விடுதலைக்காகவும் ஈழத் தமிழர்களை காப்பாற்ற கோரி தன் இன்னுயிரை கடந்த 2009-ஆம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனில் ஈழத்தமிழர்களை காப்பாற்ற கோரி முழக்கமிட்டவாறு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி முத்துக்குமார் என்ற இளைஞர் தீ வைத்துக்கொண்டார். கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முத்துக்குமார் அவர்களின் 16ஆம் ஆண்டு நினைவு தினத்தை போற்றும் வகையில் தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர் கொளத்தூர் த.ரவி தலைமையில் கொளத்தூரில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.
இதில் தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்க பேரமைப்பின் மாநில ஆலோசகர் அ.இல.சிந்தா, சென்னை மண்டல தலைவர் செ.அருணாசல மூர்த்தி, மாநில செய்தி தொடர்பாளர் எம்.பி.ரமேஷ், மாநில இணை செயலாளர் சுவை டி.ராஜா, மாவட்ட தலைவர்கள் A.ஜெயராமன், வே.செல்வநாயகம், பழம் பொருள் பொன்.கற்குவேல் ராஜன், மாவட்ட பொருளாளர் கே.சுயம்லிங்கம், ரியல்ஸ்டேட் சங்க தலைவர் M.லாரன்ஸ், செயலாளர் M.முருகேசன், பொருளார் K.சிவக்குமார், தின்பண்ட விற்பனையாளர் சங்க பொதுசெயலாளர் T.ராஜேஷ், சூரப்பட்டு வியாபாரிகள் சங்க தலைவர் பி.கோபால், வில்லிவாக்கம் வடக்கு ரேட்ஹில்ஸ் ரோடு வியாபாரிகள் சங்க தலைவர் எம்.ஏ.ஹாஜா முகையதீன், அம்பத்தூர் தொகுதி செயலாளர் M.P.ரவிக்குமார், விநாயக புரம் தொகுதி D.C.கிட்டு உள்ளிட்ட மாநில,மாவட்ட, நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.
மேலும் இது குறித்து செய்தியாளர் சந்திப்பின் போது அவர் கூறுகையில்:- ஈழத் தமிழர்களுக்காக தம் இன்னுயிரை ஈந்த தமிழீழ தியாகி முத்துக்குமாரின் பெயரை கொளத்தூர் நெடுஞ்சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என்று தமிழக முதல்வர் வலியுறுத்தி கேட்டுக்கொண்டார்.